அமரர் கல்கி நினைவுச் சிறுகதைப் போட்டி - 2020 - Receiver -->

அமரர் கல்கி நினைவுச் சிறுகதைப் போட்டி - 2020

Share This


அமரர் கல்கி நினைவுச் சிறுகதைப் போட்டி - 2020

Kalki - Image Courtesy Google
அன்பார்ந்த படைப்பாளிகளே, நீங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் சிறுகதைப் போட்டி அறிவிப்பு இங்கே!

முதல் பரிசு ₹10,000/-

இரண்டாம் பரிசு ₹7,500/-  மூன்றாம் பரிசு ₹5,000/-


இந்த பரிசுகள் மட்டுமல்லாது, பிரசுரத்துக்குத் தேர்வாகும் ஒவ்வொரு கதையும் சன்மானம் பெறும். அறிமுக எழுத்தாளராக இருந்தால் சிறப்புப் பரிசு உண்டு. ஒருவரே எத்தனை கதைகள் வேண்டுமானாலும் எழுதலாம்.

விதிமுறைகள்:


  • கல்கியில் நான்கு பக்கங்களுக்கு (1200 வார்த்தைகளுக்குள்) இருக்க வேண்டும்.
  • படைப்பு சொந்தக் கற்பனைதான் என்பதற்கு உறுதிமொழிக் கடிதம் வேண்டும். அது இல்லாத கதைகள் பரிசீலிக்கப்படமாட்டா.
  • முழு வெள்ளைத்தாளில் ஒரு பக்கத்தில் மட்டுமே எழுத வேண்டும். கதையை தபாலிலோ அல்லது மின்னஞ்சலிலோ அனுப்பலாம்.
  • மின்னஞ்சலில் கதைகளை அனுப்புவோர் Subject ஆக ' சிறுகதைப் போட்டி 2020' எனக் குறிப்பிட்டு editorkalki@kalkiweekly.com -க்கு அனுப்ப வேண்டும்.
  • போட்டிக்கு அனுப்பும் கதையைத் திருப்பி அனுப்ப இயலாது. கதையின் பிரதியை நீங்கள் வைத்துக் கொள்ளவும்.
  • முடிவுகள் வெளியாகும்வரை வேறு இதழுக்கோ இணையதளத்துக்கோ, வலைப்பதிவுகளுக்கோ, இதர போட்டிகளுக்கோ அனுப்பக்கூடாது.
  • பரிசுக்குரிய கதைகளை, நடுவர் குழு பரிசீலித்துத் தேர்ந்தெடுக்கும், கல்கி ஆசிரியரின் தீர்ப்பெ இறுதியானது.
  • முடிவு வெளியாகும் வரை, எவ்விதக் கடிதப் போக்குவரத்தோ, தொலைப்பேசி, மின்னஞ்சல் விசாரிப்புகளோ கூடாது.

--------------------------------------------------------------------------------------------------------------------------

அமரர் கல்கி நினைவுச் சிறுகதைப் போட்டி - 2020 என்று உறையின் மேல் தவறாமல் குறிப்பிட்டு அனுப்ப வேண்டிய முகவரி : ஆசிரியர், கல்கி, கல்கி பில்டிங்க்ஸ், 47-NP, ஜவாஹர்லால் நேரு சாலை, ஈக்காட்டுதாங்கல், சென்னை - 32 

* கதைகள் வந்து சேர வேண்டிய கடைசித் தேதி : ஆகஸ்ட் 31, 2020. 

* போட்டி முடிவும், முதல் பரிசுக் கதையும் அக்டோபர் மாத கல்கி மின் இதழில் (www.kalkionline.com) வெளியாகும். 

* படைப்பாளிகள், வாசக் எழுத்தாளர்கள் அனைவரும் உற்சாகத்துடன் கலந்து கொண்டு சிறப்பிக்க அழைக்கிறோம்.



No comments:

Post a Comment

Ajio [CPS] IN

Copyright © 2022 receiverteam All Right Reserved